சதா சிவத்தை பற்றி பார்க்கும் முன் காட்டுப்புத்தூருக்கும், நெரூருக்கும் உள்ள உறவை சொல்லி விடுகிறேன். நாராயண பிரம்மேந்திர், சதா சிவ பிரம்மேந்திரர் இருவரும் சமாதி நிலையை அடைய தேர்ந்தெடுத்தது காவேரி ஆற்றங்கரையை. ஆற்றின் இருபுறத்திலும் இவர்கள் சமாதி நிலையை அடைந்துள்ளார்கள். ஒரு பரிசல் மூலமாகவோ, நீச்சல் அடித்தோ ஒரு ஊரிலிருந்து மறு ஊருக்கு சென்றுவிட இயலும். இரண்டு இடங்களிலும் பௌணர்மி பூஜை விசேசம்.
நாராயண பிரம்மேந்திரரை விடவும் சதாசிவ பிரம்மேந்திருக்கு பக்தர்கள் அதிகம். மேலும் புதுக்கோட்டை மஹாராஜா சீடர் என்பதால் சதாசிவ பிரம்மேந்திர் புகழ் பல இடங்களிலும் தெரிந்திருக்கின்றது. புதுக்கோட்டை தேவஸ்தானம் அமைத்துக் கொடுத்த கோவில் புகழ் பெற்றதாய் விளங்குகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் மைசூர் மஹாராஜா, தஞ்சாவூர் மஹாராஜா போன்றோரும் சீடர்களாய் இருந்தார்கள்.
சதாசிவ பிரம்மேந்திரர் -

பிறப்பும் வளர்பும் -
சதாசிவ பிரமேந்திரர் சுமார் 350 வருடங்களுக்கு முன்பு மதுரையில் சோமநாதயோகி - பார்வதிதேவி என்ற தவசீலர்களுக்கு தவப்புதல்வராய்ப் பிறந்தார். அக்காலத்து ஞானவைராக்கியம் பெற்ற பரமசிவேந்திராள் எனும் ஞானாச்சாரியாரிடம் தீட்சை பெற்று, சதாசிவம் என்னும் திருநாமம் பெற்றார். இயற்பெயர் சிவராமகிருஷ்ணன்.
இள வயதிலேயே இவருக்கு திருமணம் நடந்தது. திருவிசை நல்லூர் ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாளிடத்தில் சாஸ்திரங்களை கற்றார். சாஸ்திரங்களை கற்கும் போதே அவற்றில் அனுபூதி பெற்றார். இவரின் ஞானத்தை அறிந்த ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாள் இவரை பரமசிவேந்திராள் என்ற குருவிடம் கற்க ஏற்பாடு செயதார்.
மிக விரைவில் சாஸ்திரங்களை கற்று மைசூர் சமஸ்தான வித்வானாக அமர்ந்தார். அப்போது தன்னுடைய திறமையால் நற்பெயர் பெற்றார்.
ஆசான் அறிவுரை-
இக்காலகட்டத்தில் சிவராமகிருஷ்ணனை சந்திதித்த அவருடைய குருநாதர் ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார். அந்த நிமிடத்திலிருந்தே இனி பேசுவதில்லை என்று தீர்மானித்து மௌனியானார். குருவும் அவருக்கு சந்நியாசம் கொடுத்து சதாசிவம் என்ற பெயரையும் சூட்டி உனக்கு பிரியமான இடத்திற்கு சென்று நீ தவம் இயற்றலாம் எனச் சொல்லிவிட்டார்.
நெரூர் -
பின்பு எந்நாட்டிலும் தென்நாடாம் தமிழ்த் திருநாட்டின் பொன்னி நதியாம் காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள நெரூர் என்னும் கிராமத்திற்கு தவம்புரிய வந்தடைந்தார். சதாசிவம் அவர்கள் இங்கிருந்து மந்திர யோகம், பரிச யோகம், பாவ யோகம், அபாவ யோகம், மகா யோகம் என்ற ஐந்து யோகங்களையும் அனுஷ்டிக்க ஆரம்பித்தார். சுவாசத்தோடு மந்திரத்தைச் சேர்த்துப் பழகிக் கொள்வது பரிசயோகம். இது குண்டலினி யோகம் என்றும் அழைக்கப்பெறும். உலகில் உள்ள பொருள்கள் கற்பனையில் நாம் மனத்தால் நினைக்கும் பொருள்கள் அனைத்தையும் கடவுள் என்று பாவனை செய்து விடுவது பாவயோகமாகும்.
இதனால் எந்த பொருளின் மீதும் ஆசையும், துவேஷமும் ஏற்படாது. இதுவே பாவ யோகத்தின் பலனாகும். இதற்கடுத்த நிலையிலிருப்பது அபாவகயோகம். உலகில் காணும் அனைத்தும் கடவுளே என்ற பாவனையையும் விட்டு விட்டு தானை கடவுள் என்றும், தனக்கு அந்நியமாக ஒரு கடவுள் இல்லை என்றும் எண்ணுவதே அபாவகயோகமாம். மகாயோகம் என்பது தானே கடவுள் என்ற அந்த கடைசி எண்ணத்தையும் விட்டு விடுவதாகும். ஜப்பானின் ஜென் ஞானிகள் சொல்வதைப்போல் சூனியத்தையும் விட்டுவிடுவது. மனதில் எண்ணங்களில்லை என்று உணர்வதே ஒரு எண்ணமாம். ஆகவே அதையும் விட்டுவிடுவதே மகாயோகமாகும். இந்த ஐந்து யோகங்களும் பூர்த்தியடைந்த பிறகு சதாசிவபிரமேந்திரர் பல யோகசித்திகள் புரிந்துள்ளார்.
குகை அமைத்தல் -
பின் இந்தியாவெங்கும் சென்றார். sகாடு, நாடு நகரமென சுற்றித் திரிந்த பிரமேந்திரருக்கு புதுக்கோட்டை மஹாராஜா, மைசூர் மஹாராஜா, தஞ்சாவூர் மஹாராஜா ஆகியோர் அனுக்க சீடர்களாய் விளங்கினர். கி.பி 1738 ஆம் வருஷம் புதுக்கோட்டை ராஜாவுக்கு உபதேசம் செய்ததாக சரித்திர குறிப்புள்ளது. தான் ஜீவசமாதியடையும் காலம் வந்ததை உணர்ந்த பிரமேந்திரர் மீண்டும் நெரூர் வந்தார். தன் சீடர்களான புதுக்கோட்டை மகாராஜா, மைசூர் மஹாராஜா, தஞ்சாவூர் மஹாராஜா ஆகியோரை மானசீகமாய் அழைத்தார்.அவர்களும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம், குகையமையுங்கள். நான் அதனுள் உட்கார்ந்ததும் சாமக்கியைகளால் மறைத்து விடுங்கள் எனறார். அவர்கள் அழுதனர். ஆவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
சமாதி அற்புதம் -
சதாசிவ பிரம்மேந்திர் சமாதி

பிரமேந்திரர் சொன்னதுபோல் குகை அமைக்கப்பட்டது. உட்காரும் போது போடக்கூடிய சாமான்களையெல்லாம் சதாசிவ பிரமம் அவர்களுக்கு அறிவித்தார். "விபூதி, உப்பு, மஞ்சள் தூள், செங்கற்பொடி போட்டு மூடிவிடுங்கள். ஒன்பதாம் நாள் சிரசின் மேல் வில்வ விருட்சம் தோன்றும். பன்னிரெண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் வரும். அதை 12 அடிக்கு கிழபுறம் வைத்து கோயில் கட்டுங்கள். வில்வவிருட்சத்திற்கு மறைப்பு பண்ண வேண்டாம். மேடை போட்டு விடுங்கள் என்று கூறியருளினார். குறிப்பிட்ட நாளில் சதாசிவ பிரமம் குகையில் அமர்ந்து விட்டார். பக்தர்கள் திரளாக கூடினர். சுவாமிகள் உள்ளே உட்கார்ந்தவுடனே எல்லாச் சாமான்களையும் போட்டு மூடினார்கள். ஒன்பதாம் நாள் வில்வமரம் தோன்றியது.

2 கருத்துகள்:
உடல் சிலிர்க்கிறது.....மிக நேர்த்தியான கட்டுரை.படங்கள் அற்புதம்.எங்கள் சொந்த ஊர் சோமுர் அருகில் ,நெரூர் இருப்பதால் அடிக்கடி சென்று வருவேன்.பிரபலங்கள் அதிகமானோர் பொளர்ணமிக்கு வந்து வழிபடுகிறார்கள்.கலைஞரின் துணைவியார் கூட அடிக்கடி வருவதாக சொல்கிறார்கள்.அமாவாசை அன்னதானம் ஒருமுறை சசிகலா செய்தார்.நடிகர்,நடிகைகள் ,கர்நாடகா முதல்வர்,ஆந்திராமுக்கியஸ்தர்கள், காசி ஸ்தலத்தில் இருந்தெல்லாம் வந்து வழிபடுகிறார்கள்...மனக்கவலைகள் அனைத்தையும் போக்கும் அற்புத சக்தி இந்த ஸ்லத்திற்க்கு உண்டு..
miga miga arumayana idam athu
கருத்துரையிடுக