வெள்ளி, 26 மார்ச், 2010

சதாசிவ பிரம்மேந்திரர்

நாம் சென்ற இடுகையில் பார்த்தது காட்டுப்புத்தூர் நாராயண பிரம்மேந்திரர். இந்த இடுகை நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரைப் பற்றியது.

சதா சிவத்தை பற்றி பார்க்கும் முன் காட்டுப்புத்தூருக்கும், நெரூருக்கும் உள்ள உறவை சொல்லி விடுகிறேன். நாராயண பிரம்மேந்திர், சதா சிவ பிரம்மேந்திரர் இருவரும் சமாதி நிலையை அடைய தேர்ந்தெடுத்தது காவேரி ஆற்றங்கரையை. ஆற்றின் இருபுறத்திலும் இவர்கள் சமாதி நிலையை அடைந்துள்ளார்கள். ஒரு பரிசல் மூலமாகவோ, நீச்சல் அடித்தோ ஒரு ஊரிலிருந்து மறு ஊருக்கு சென்றுவிட இயலும். இரண்டு இடங்களிலும் பௌணர்மி பூஜை விசேசம்.

நாராயண பிரம்மேந்திரரை விடவும் சதாசிவ பிரம்மேந்திருக்கு பக்தர்கள் அதிகம். மேலும் புதுக்கோட்டை மஹாராஜா சீடர் என்பதால் சதாசிவ பிரம்மேந்திர் புகழ் பல இடங்களிலும் தெரிந்திருக்கின்றது. புதுக்கோட்டை தேவஸ்தானம் அமைத்துக் கொடுத்த கோவில் புகழ் பெற்றதாய் விளங்குகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் மைசூர் மஹாராஜா, தஞ்சாவூர் மஹாராஜா போன்றோரும் சீடர்களாய் இருந்தார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரர் -



பிறப்பும் வளர்பும் -

சதாசிவ பிரமேந்திரர் சுமார் 350 வருடங்களுக்கு முன்பு மதுரையில் சோமநாதயோகி - பார்வதிதேவி என்ற தவசீலர்களுக்கு தவப்புதல்வராய்ப் பிறந்தார். அக்காலத்து ஞானவைராக்கியம் பெற்ற பரமசிவேந்திராள் எனும் ஞானாச்சாரியாரிடம் தீட்சை பெற்று, சதாசிவம் என்னும் திருநாமம் பெற்றார். இயற்பெயர் சிவராமகிருஷ்ணன்.

இள வயதிலேயே இவருக்கு திருமணம் நடந்தது. திருவிசை நல்லூர் ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாளிடத்தில் சாஸ்திரங்களை கற்றார். சாஸ்திரங்களை கற்கும் போதே அவற்றில் அனுபூதி பெற்றார். இவரின் ஞானத்தை அறிந்த ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாள் இவரை பரமசிவேந்திராள் என்ற குருவிடம் கற்க ஏற்பாடு செயதார்.

மிக விரைவில் சாஸ்திரங்களை கற்று மைசூர் சமஸ்தான வித்வானாக அமர்ந்தார். அப்போது தன்னுடைய திறமையால் நற்பெயர் பெற்றார்.

ஆசான் அறிவுரை-

இக்காலகட்டத்தில் சிவராமகிருஷ்ணனை சந்திதித்த அவருடைய குருநாதர் ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார். அந்த நிமிடத்திலிருந்தே இனி பேசுவதில்லை என்று தீர்மானித்து மௌனியானார். குருவும் அவருக்கு சந்நியாசம் கொடுத்து சதாசிவம் என்ற பெயரையும் சூட்டி உனக்கு பிரியமான இடத்திற்கு சென்று நீ தவம் இயற்றலாம் எனச் சொல்லிவிட்டார்.

நெரூர் -

பின்பு எந்நாட்டிலும் தென்நாடாம் தமிழ்த் திருநாட்டின் பொன்னி நதியாம் காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள நெரூர் என்னும் கிராமத்திற்கு தவம்புரிய வந்தடைந்தார். சதாசிவம் அவர்கள் இங்கிருந்து மந்திர யோகம், பரிச யோகம், பாவ யோகம், அபாவ யோகம், மகா யோகம் என்ற ஐந்து யோகங்களையும் அனுஷ்டிக்க ஆரம்பித்தார். சுவாசத்தோடு மந்திரத்தைச் சேர்த்துப் பழகிக் கொள்வது பரிசயோகம். இது குண்டலினி யோகம் என்றும் அழைக்கப்பெறும். உலகில் உள்ள பொருள்கள் கற்பனையில் நாம் மனத்தால் நினைக்கும் பொருள்கள் அனைத்தையும் கடவுள் என்று பாவனை செய்து விடுவது பாவயோகமாகும்.

இதனால் எந்த பொருளின் மீதும் ஆசையும், துவேஷமும் ஏற்படாது. இதுவே பாவ யோகத்தின் பலனாகும். இதற்கடுத்த நிலையிலிருப்பது அபாவகயோகம். உலகில் காணும் அனைத்தும் கடவுளே என்ற பாவனையையும் விட்டு விட்டு தானை கடவுள் என்றும், தனக்கு அந்நியமாக ஒரு கடவுள் இல்லை என்றும் எண்ணுவதே அபாவகயோகமாம். மகாயோகம் என்பது தானே கடவுள் என்ற அந்த கடைசி எண்ணத்தையும் விட்டு விடுவதாகும். ஜப்பானின் ஜென் ஞானிகள் சொல்வதைப்போல் சூனியத்தையும் விட்டுவிடுவது. மனதில் எண்ணங்களில்லை என்று உணர்வதே ஒரு எண்ணமாம். ஆகவே அதையும் விட்டுவிடுவதே மகாயோகமாகும். இந்த ஐந்து யோகங்களும் பூர்த்தியடைந்த பிறகு சதாசிவபிரமேந்திரர் பல யோகசித்திகள் புரிந்துள்ளார்.

குகை அமைத்தல் -

பின் இந்தியாவெங்கும் சென்றார். sகாடு, நாடு நகரமென சுற்றித் திரிந்த பிரமேந்திரருக்கு புதுக்கோட்டை மஹாராஜா, மைசூர் மஹாராஜா, தஞ்சாவூர் மஹாராஜா ஆகியோர் அனுக்க சீடர்களாய் விளங்கினர். கி.பி 1738 ஆம் வருஷம் புதுக்கோட்டை ராஜாவுக்கு உபதேசம் செய்ததாக சரித்திர குறிப்புள்ளது. தான் ஜீவசமாதியடையும் காலம் வந்ததை உணர்ந்த பிரமேந்திரர் மீண்டும் நெரூர் வந்தார். தன் சீடர்களான புதுக்கோட்டை மகாராஜா, மைசூர் மஹாராஜா, தஞ்சாவூர் மஹாராஜா ஆகியோரை மானசீகமாய் அழைத்தார்.அவர்களும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம், குகையமையுங்கள். நான் அதனுள் உட்கார்ந்ததும் சாமக்கியைகளால் மறைத்து விடுங்கள் எனறார். அவர்கள் அழுதனர். ஆவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

சமாதி அற்புதம் -


சதாசிவ பிரம்மேந்திர் சமாதி



பிரமேந்திரர் சொன்னதுபோல் குகை அமைக்கப்பட்டது. உட்காரும் போது போடக்கூடிய சாமான்களையெல்லாம் சதாசிவ பிரமம் அவர்களுக்கு அறிவித்தார். "விபூதி, உப்பு, மஞ்சள் தூள், செங்கற்பொடி போட்டு மூடிவிடுங்கள். ஒன்பதாம் நாள் சிரசின் மேல் வில்வ விருட்சம் தோன்றும். பன்னிரெண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் வரும். அதை 12 அடிக்கு கிழபுறம் வைத்து கோயில் கட்டுங்கள். வில்வவிருட்சத்திற்கு மறைப்பு பண்ண வேண்டாம். மேடை போட்டு விடுங்கள் என்று கூறியருளினார். குறிப்பிட்ட நாளில் சதாசிவ பிரமம் குகையில் அமர்ந்து விட்டார். பக்தர்கள் திரளாக கூடினர். சுவாமிகள் உள்ளே உட்கார்ந்தவுடனே எல்லாச் சாமான்களையும் போட்டு மூடினார்கள். ஒன்பதாம் நாள் வில்வமரம் தோன்றியது.

நாரயண பிரம்மேந்திரர்




இந்த நாராயண பிரம்மேந்திரர் மடத்தை பார்த்த நண்பர்கள் அதிசயித்தார்கள்.அவருடைய மகிமைகளை எடுத்துச் சொல்லவும் ஆனந்தப்பட்டார்கள்.உடனே என்னிடம் இந்த மடத்தைப் பற்றி இணையதளத்தில் கண்டிப்பாக எழுது,அது பலருக்கும் பயணளிப்பதாக இருக்கும் என்று அன்பு கட்டளையிட்டார்கள்.அதன் விளைவு இக்கட்டூரை.

தள வரலாறு-

நாராயண பிரம்மேந்திரர் தன்னுடைய அறுபது ஆண்டுகளை கழித்து,அவர் வாழ்ந்த இடத்திலேயே நூற்றி இருபதாவது வயதில் சமாதி அடைந்த இடம் இந்த காட்டுப்புத்தூரில் இருக்கும் மடம்.

நாராயண பிரமேந்திரர் வரலாறு

பிறப்பும் இல்லறமும்-

நாராயணன் பிறந்தது ஆந்திரா மாநிலத்தில் உள்ள வேட்கூர் என்னும் கிராமம்.அவருடைய தந்தையார் பெயர் வேங்கடாசல ரெட்டி.நாராயணன் படிப்பிலும் பக்தியிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.கற்றதை பிறருக்கு எளிய முறையில் விளக்கி சொல்லுவார்.கோவில்களுக்கு நண்பர்களுடன் சென்று வழிபடுவார்.
இல்லற வாழ்வு-திருமணத்திற்கு நாராயணன் மறுப்பு தெரிவித்த போதும் உறவுகள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்தனர்.நாராயணனின் மனைவி பெயர் இலக்குமி.இவர்களின் இல்லறம் நல்லறமானதில் ஆணொன்றும் பெண்ணொன்றும் பிறந்தன.இருவரையும் கல்வி கற்க வைத்து,தக்க காலத்தில் திருமணமும் செய்தார்.

தடுத்தாட் கொள்ளல்-

மூன்று முறை அம்மையே எடுத்துக் கூறியும் நாராயணன் துறவு மேற்கொள்ளவில்லை.அதனால் நான்காம் முறை கனவில் வந்த அம்மை ஒரு துணியில் நீ சம்பாதித்த பணத்தை கட்டி ஓர் இடத்தில் யாருக்கும் தெரியாமல் புதைத்து வை.ஒருவாரம் கழித்து அங்கு சென்று பார் அது நிலைத்திருக்குமா என்றாள்.இருமுறை அவ்வாறு செய்து பார்த்ததில் பணம் காணாமல் போனது.அதன் அர்த்தம் உணராமல் நாராயணன் மிகவும் தவித்து போனார்.என்றாலும் இல்லறத்தை துறக்கவில்லை.மீண்டும் கனவில் வந்த அம்மை இந்த வாழ்க்கை நிலையில்லை என உணரவைத்தார். அதோடில்லாமல் நாராயணனின் உறவினர்கள் அடுத்தடுத்து மாண்டனர்.சுமார் முப்பது பேருக்கும் மேல் மாண்டதை எண்ணி கலங்கினார் நாராயணன்.
ஐந்தாம் முறையாக கனவில் வந்த அம்மை “ஒட்டனாய் பிறந்தபோது கல் சுமக்கவில்லையா?.நாட்டுக்குள் தோட்டியாய் பிறந்த போது மாட்டைக் கட்டி சுமக்கவில்லையா?.இப்போது மார்நோக திருவோட்டை சுமந்தால் மட்டும் தேகம் இளைத்துவிடுமா?.”என கேள்வி கேட்க.இனியும் இப்படியே இல்லறத்தில் இருந்தால் ஈசனுக்கு கோபம் வருமென எண்ணி துறவறம் பூண்டார் நாராயணன்.

சித்தூர்-

நாராயணனை பல இடங்களில் தேடி கடைசியாக சித்தூரில் கண்டுபிடித்தனர் அவரின் உறவுகள்.ஆனால் இப்போது அவர் நாராயணாக இல்லை பிரம்மேந்திரராக இருந்தார்.இல்லற வாழ்க்கையை தாம் துறந்துவிட்டதை எடுத்துக்கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார்.அங்கிருந்த ஒருவர் அவருக்கு தினமும் ஒருபிடி கடலைப் பருப்பும் மோரும் தந்து அன்புடன் ஆதரித்தார்.

சோலை,நதி,மணல் மேடு என அனைத்து இடங்களிலும் பத்மாசனத்திலிருந்து தேவியை வழிபட்டு வந்தார்.பார்வதி தேவியின் பக்தி தவத்தில் மண்ணையும் நீரையுமே உணவாக் கொள்ள ஆரமித்தார்.சித்தூரில் மூன்று வருடம் தங்கியிருந்தார்.மக்கள் இவருடைய மகிமைகளை புரிந்து கொண்டு வரம் தர வேண்டுமென தொல்லை செய்தனர்.தாம் தனியாக தவமிருக்க எண்ணி சித்தூரிலிருந்து வெளியேறினார்.

பழனிமலை பயணம்-

சித்தூரிலிருந்து திருப்பதி செல்லலாம் என முடிவெடுத்தார்.வேங்கடமுடையான் மீது நூறு விருத்தம் பாடினார்.ஆனால் திருப்பதி பயணம் வேண்டாமென உத்திரவு வர,அதை ஏற்றுக் கொண்டு தென்திசையில் நடக்கலானார்.ஒரு துறவியிடம் நம்மை போன்றவர்களுக்கு ஏற்ற இடம் இங்குள்ளதா என வினவ,அத்துறவி பழனிமலையை ஏற்ற இடமாக சொன்னார்.

காட்டுப்புத்தூருக்கு வருதல்-

பழனி செல்ல திருச்சிராப்பள்ளி கருர் வழியாக செல்ல இருவரும் முடிவெடுத்தனர்.அதன்படி திருச்சிராப்பள்ளி வர அங்கே காட்டுப்புத்தூரிலிருந்து வருகின்ற சாதுகள் தங்களுக்கு உண்டியும்,உணவும், அரை ரூபாயும் தந்த ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசுவதை கேட்டார் நம் சுவாமிகள்.தனக்கும் குளிருக்கு உடையும்,பணமும் கிடைக்குமென காட்டுப்புத்தூருக்கு வந்தார்.அவருடன் வந்தவர் சாவடில் இருக்க பிரம்மேந்திரர் மட்டும் ஊருக்குள் வந்தார்.

காட்டுப்புத்தூரில் தங்குதல்-

நாராயண பிரம்மேந்திரர் ஊருக்குள் வருவதைக்கண்ட சந்திரசேகரப் பிள்ளை,செவ்வைத்தியலிங்கம் பிள்ளை,சஞ்சீவி உபாத்தியாயர் என்ற மூன்று உள்ளூர் வாசிகள்,அவருடன் பேசி மகிமையை அறிந்து கொண்டார்கள்.தங்கள் ஊரிலேயே தங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்ள,பிரம்மேந்திரரும் சம்மதம் தெரிவித்தார்.அந்த மூன்று பேரையும் காட்டுப்புத்தூர் மக்கள் மிகவும் மதிப்புடன் மரியாதையுடனும் ஞாபகம் வைத்துள்ளார்கள்.காட்டுப்புத்தூர் மக்களின் அன்பைக் கண்டு பழனி செல்லும் முடிவை மறந்தார்.ஊர் மக்கள் அமைத்து தந்த குடிலில் வசிக்கலானார்.

சமாதியடைதல்-

காட்டுப்புத்தூரில் அறுபத்து மூன்று வருடம் வாழ்ந்து பல்வேறு அதிசியங்களை நிகழ்த்தினார் பிரம்மேந்திரர்.நூற்றி இருபதாவது வயதில் ஈசனிடம் கலந்து பிறவியை முடிக்க எண்ணினார்.அதனால் எதையும் உண்ணாமல் இருந்தார்.பிறகு கலியுகம் 5012 விரோதிகிருது வருடம் மாசி மாதம் 28ம் தேதி வாரம் கோட்டை நட்சதிரத்தில் அடியார்கள் புடை சூழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே உடலை விடுத்து ஈசனை அடைந்தார்.

சிறப்பு-

பசிக்கும் போது ஒருபிடி மணலும்,நீரும் மட்டும் உண்டு உயிர்வாழ்ந்த ஒப்பற்ற துறவி.இவ்வாறு பதினைந்து வருடங்கள் இருந்ததாக கூறுகிறது இவரைப் பற்றிய பிரம்மேந்திரகீதம் என்னும் நூல்.

துயரமென்று யார் வந்தாலும் நல்வார்த்தைகள் கூறி,அவருடைய துயரங்களை அகற்றும் சாது.
அப்பாதுரை பிள்ளை என்பவர் தம் மனைவிகள் இருவருக்கும் குழந்தையில்லாமல் போக பிரம்மேந்தரிடம் வேண்டினார்.அதன் பிறகு அவரின் ஒரு மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

கோட்டையம்மாள் என்னும் பெண்மணி வேகவைத்த துவரம் பருப்பையும் சர்க்கரையையும் நெய்யும் சேர்த்து தினமும் பிரம்மேந்திரருக்கு தருவார்,அவரும் அதை அன்பு கூர்ந்து ஏற்றுக்கொண்டார்.ஒரு முறை 15 படி அரிசி சமைத்து ஊரிலிருக்கும் மக்களுக்கு அன்னமிட்டார்.அப்போது பிரம்மேந்திரரையும் அழைக்க அவரும் ஒரு கொட்டாங்கட்சி அளவு அன்னம் மட்டுமே உண்டார்.

செல்லும் வழி-

காட்டுப்புத்தூருக்கு செல்ல நாமக்கலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இருக்கிறது.
திருச்சியிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.என்றாலும் நேரடி பேருந்துகள் குறைவு.எனவே திருச்சியிலிருந்து சேலம் அல்லது நாமக்கல் செல்லும் பேருந்துகளில் ஏறி தொட்டியம் என்னும் ஊரில் இறங்கினால்,ஏகப்பட்ட பேருந்துகள் காட்டுப்புத்தூருக்கு உள்ளன.
கரூரிலிருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.அதிலும் வேலூர்,மோகனூர் வந்துவிட்டால் இன்னும் அதிக பேருந்துகள் கிடைக்கும்.

நன்றி-

வரலாறுக்காக பிரம்மேந்திரகீதம் புத்தகத்திற்கும்,
இதர தகவலுக்காக என் அன்னை மருதாம்பாள் தமிழாசிரியைக்கும்.

நாரயண பிரம்மேந்திரர்

புதன், 24 மார்ச், 2010

மோசமான உலகம் இது!










சனி, 13 மார்ச், 2010

தர்க்கத்திற்கு அப்பால்… - ஜெயகாந்தன்

வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை. நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான். ஒரு காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட ‘வெற்றி’கள், வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன.

என் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய்ப் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன். வழக்கம் போல ‘தோல்வி நிச்சயம்’ என்ற மனப்பான்மையுடன் போன நான், வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப் போனேன். தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்கு தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டு விட்டது.

கற்பனைக்கும் எட்டாத ஒரு பேரழகியை ரகஸ்யமாய் மனசிற்குள் காதலித்து, அந்தக் காதலை அவளிடம் வெளியிடும் என் எண்ணத்தை நானே பரிகஸித்து, பின்னொரு அசட்டுத் துணிவில், அவளது பரிகஸிப்பையும் ஏச்சையும் எதிர்பார்த்துத் தயங்கி, நாணிக் கூசி அவள் சந்நிதியில் நின்று ‘உன்னை நான் காதலிக்கிறேன்’ என்று முற்றிலும் கூறி முடிக்கும் முன்பாக, அந்த வானத்துக் கனவு எனது வார்த்தையை எதிர்பார்த்துப் பல காலம் தவங் கிடந்தவளே போன்று ஆயிரம் முத்தங்களை எதிர் நோக்கிச் சிவந்த அதரங்கள் துடிதுடிக்க என் கரங்களிடையே விழுந்ததற்கொப்பான தோல்வி அது!

இந்தத் தோல்வியை, அல்லது வெற்றியைக் கொண்டாடித் தீர வேண்டும். ஊருக்குத் திரும்பிய பின்தானே? அல்ல; இப்போதே! நான் ரொம்ப அவசரக்காரன்.

கொண்டாடுவது என்பது பெரிய காரியமா? அது கொள்ளப்பட்ட உள்ளம் தன்னுள் லயித்துக் குதூகலிப்பது. அதன் விளைவாய் ஏற்படும் புற நிகழ்ச்சிகள் பெரிய காரியமன்று. கொண்டாடத்தக்கதை சிலர் வானத்தை வண்ணப் படுத்தும் வேடிக்கை நிகழ்த்திக் கொண்டாடுவார்கள். சிலர் நாலு பேருக்கு வயிறார உணவளித்துக் கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் அந்தப் பொழுதிலாவது தன் வயிறார தான் உண்டு மகிழ்வார்கள். அதெல்லாம் அப்பொழுதிருக்கும் அவரவர் சக்தியைப் பொறுத்தது. எனினும், மனசில் ஏற்படும் அனுபவம் அனைவர்க்கும் ஒன்றுதான்.

இப்பொழுது என் நிலைமை… பையிலிருக்கும் ஒரு வெள்ளி ரூபாய் நாணயம்தான். அதற்கென்ன? இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே! அதுதான் முடியாது. ஊருக்குப் போக முக்கால் ரூபாய் வேண்டும். அதனால்தான் என்ன? கால் ரூபாயில் கொண்டாட முடியாதோ? நிச்சயம் முடியும்.

சங்கரய்யர் ஹோட்டலில் புதுப் பால், புது டிகாக்ஷன், சர்க்கரை கம்மி, ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி இரண்டணா தான். காபி அருந்தியதும் உடம்பில் ஒரு தெம்பும், மனசில் ஒரு தனிக் குதூகலமும் பிறந்தன. ஊர் திரும்ப ஒதுக்கி வைத்த பன்னிரண்டணா போக, கையில் இருக்கும் இரண்டணாவை என்ன செய்யலாம்? ‘கடைசிச் சல்லியையும் ஒரு ராஜாவைப் போல் செலவு செய்’ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.

”ஐயா தருமதுரை… கண்ணில்லாத கபோதி ஐயா..!” என்ற குரல். ஸ்டேஷனுக்குள் நுழையும் இடத்தில், ஒரு ஓரமாய் அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். கிழவன். அவன் எதிரே இருந்த அலுமினி யப் பாத்திரத்தில் வெறும் செப்புக் காசுகளே கிடந்தன. அவற்றின் நடுவே நான் போட்ட இரண்டணா, வெள்ளை வெளேரென்று விழுந்தது அழகாகத்தான் இருந்தது. குருடன் அதை எடுத்துத் தடவிப் பார்த்தவாறே, நான் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்ட திசை நோக்கிக் கரம் குவித்து, ”சாமி, நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியமுண்டு” என்று வாழ்த்தினான். அதன் பிறகு, உண்மையிலேயே நாலணாவில் அந்த நல்ல நாளைக் கொண்டாடி விட்ட நிறைவு பிறந்தது எனக்கு.

புக்கிங் கவுண்டரின் அருகே போய் என் சொந்தக் கிராமத்தின் பெயரைச் சொல்லிச் சில்லறையை நீட்டினேன். டிக்கெட்டை எதிர்பார்த்து நீண் டிருந்த என் கைக்குள் மீண்டும் சில்லறையே விழுந்தது.

”இன்னும் ஓரணா கொடுங்கள் ஸார்!”
”பன்னிரண்டணாதானே?”
”அது நேற்றோடு சரி. இன்னிலேருந்து அதிகம்.”

என் கை சில்லறையுடன் வெளியே வந்தது. திடீரென்று பாதாளத்தில் வீழ்ச்சியுற்றது போன்ற திகைப்பில் நின்று விட்டேன். ‘யாரிடம் போய் ஓரணா கேட்பது?’

‘அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறாரே, அவரிடம்…’ என்று நினைக்கும்போதே, ‘ஓரணாதானே, கேட்டால்தான் என்ன’ என்று நினைக்கும்போதே, கேட்டால் என்று நடக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருந்தது அங்கே! யாரோ ஒருவன் அவர் அருகே சென்றான். அவன் என்ன கேட்டானோ? அவர் சொன்ன பதில் உலகத்துக்கே கேட்டது. எனக்கும் உறைத்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிஷம் ஆகவில்லை. ஓரணாவுக்கு யாசிப்பதா என்று யோசிக்கும் நிலை வந்துவிட்டதை எண்ணும்போது, மனம்தான் வாழ்க்கையுடன் என்னமாய்த் தர்க்கம் புரிகிறது?

‘அதோ, அந்தக் குருடனின் அலுமினியப் பாத்திரத்தில் செப்புக் காசுகளின் நடுவே ஒளி விட்டுச் சிரிக்கிறதே இரண்டணா, அது என்னுடையது!’

‘அது எப்படி உன்னுடையதாகும்? நீ கொடுத்துவிட்டாய்; அவன் வாழ்த்திவிட்டான்!’

‘இப்ப சந்தியில் நிற்கிறேனே? அதில் ஓரணா கூடவா எனக்குச் சொந்தமில்லை? அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது என்னுடையது அல்லவா? கேட்டால் தருவானா? தர மாட்டான். அவனுக்கு எப்படித் தெரியும் அதைப் போட்டவன் நான் என்று!’

‘எடுத்துக் கொண்டால்? அதோ, ஒரு ஆள் ஓரணா போட்டுவிட்டு அரையணா எடுத்துக் கொள்கிறானே! அது போல ஓரணாவைப் போட்டு விட்டு அந்த என்னுடைய இரண்டணாவை எடுத்துக் கொண்டால்?’

‘இது திருட்டு அல்லவா?’

‘திருட்டா? எப்படியும் என் பக்கத்திலிருந்து தர்மமாக ஓரணா அவனுக்குக் கிடைக்குமே! அந்த ஓரணா புண்ணியம் போதும்; என் காசை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்று பொருளாதார ரீதியாய்க் கணக்கிட்டுத் தர்க்கம் பண்ணிய போதிலும், திருடனைப் போல் கை நடுங்குகிறது. ஓரணாவைப் போட்டேன்; இரண்டணாவை எடுத்துக்கொண்டு திரும்பி னேன்.

”அடப்பாவி!” திரும்பிப் பார்த்தேன். குருட்டு விழிகள் என்னை வெறிக்க, வாழ்த்தத் திறந்த வாயால் சபிப்பது போல் அவன் கேட்டான்…

”சாமி, இதுதானுங்களா தர்மம்? யாரோ ஒரு புண்ணியவான் இரண்டணா போட்டாரு. அதை எடுத்துக்கிட்டு, ஓரணா போடறியே? குருடனை ஏமாத்தாதே, நரகத்துக்குத்தான் போவே!”

நெருப்புக் கட்டியைக் கையிலெடுத்ததுபோல் அந்த இரண்டணாவை அலுமினியத் தட்டில் உதறினேன். இப்பொழுது என் கணக்கில் மூன்றணா தர்மம்.

‘தெரியாம எடுத்துட்டேன்’ என்று சொல்லும்போது, என் குரலில் திருட்டுத்தனம் நடுங்கியது.

ஒரு பெண் அரையணா போட்டுவிட்டுக் காலணா எடுத்துச் சென்றாள். குருடன் உடனே இரண்டணா இருக்கி றதா என்று தடவிப் பார்த்தான். அப்படிப் பார்த்தபோது அது இல்லாதிருந்துதான் நான் சிக்கிக்கொண்டேன் என்று புரிந்தது. அது அவனுக்குக் கிடைக்காமல் கிடைத்த செல்வம். விட மனம் வருமா?

நான் யோசித்தேன்.

‘அது அவன் பணமா?’

‘ஆமாம்!’

‘நான்தானே தந்தேன்!’

‘காசைத்தான் கடன் தரலாம்; தருமத்தைத் தர முடியுமா? தருமத்தை யாசித்து, தந்தால்தான் பெறவேண்டும்.’

வெகுநேரம் நின்றிருந்தேன். நான் போக வேண்டிய ரயில் வந்து போய்விட்டது. அடுத்த வண்டிக்கு இன்னும் நேரமிருக்கிறது. தர்மத்தின் பலனை அடுத்த ஸ்டேஷன் வரை கால்வலிக்க நடந்து அனுபவித்தேன்.

சில வருஷங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஒரு கோர ரயில் விபத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது, அன்று நான் போக இருந்து, தவறவிட்ட ரயில்தான்.
இந்த விபத்திலிருந்து நான் எப்படித் தப்பினேன்? தருமம் காத்ததா?

எனக்குத் தெரியாது. இதெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது!

கற்பழிப்புக்கு காரணம் யார்

கற்பழிப்புக்கு காரணம் பெண்களே என்று ஆய்வு தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

லண்டனில் சமீபத்தில் கற்பழிப்பு குற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப் பட்டது. 18 முதல் 24 வயது பெண்களே அதிகம் கற்பழிக்கப்படுகின்றனர்.

காரணம் -

1. இளம் பெண்கள் குட்டையான பாவாடை போன்று தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக உடை அணிவது.
2. ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது.
3. ஆண் நண்பர்களின் வீட்டில் தங்குதல்.
4. விருந்து நிகழ்ச்சியில் மேலாடை விலகுவதுகூட தெரியாமல் நடணம் ஆடுவது.

இதனால் தான் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கின்றன.

மேலும் ஒரு செய்தி கற்பழிக்கப்பட்ட பெண்களில் 50% பேர் போலிசில் சொல்வதில்லை. மூன்றில் ஒரு ஆண் குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை.

நன்றி – தினமலர் நாளிதல்

கற்பழிப்புக்கு காரணம் பெண்களே – ஒரு ஜொள்ளாய்வு தகவல்

வாய் வழிப் புணர்ச்சி

இது மருத்துவ ரீதியான கட்டுரை அல்ல. ஒரு விவாதம் மட்டுமே.

திருமணம் என்பது மூன்று காரணங்களுக்காக நடக்கின்றன.

1. பாலியல் தேவை
2. குழந்தை வளர்ப்பு
3. சமூகம்

பாலியல் தேவை -

எல்லா உயிர்களுக்கும் இருக்கும் முக்கிய மூன்று பணிகளில் தன் இனத்தினை தளையச் செய்வதும் ஒன்று. அதனால் உணவைப் போல புணர்ச்சிக்கும் பசியை கொடுத்தது இயற்கை. சிலருக்கு தினம் தினம் ஒரே உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் பிடிக்காது. எனவே வேறு வகை உணவை உண்ண ஆசை கொள்கின்றார்கள். அது போல துணையை மாற்றிக் கொள்ளும் எண்ணமும் பலரும் இருக்கின்றது. அதற்காக அடுத்தவர் உணவுக்கும் ஆசைப்படுதல் தவறு தானே. தனக்கென இருக்கும் உணவில் அவர்கள் வகைவகை உணவு செய்து கொள்ளலாம் அள்ளவா. அந்த உணவைப் போல் தனக்கு துணை தேடுதலே திருமணம்.

குழந்தை வளர்ப்பு -

சந்ததியை உலகில் நிலை நாட்டவே புணர்ச்சி என்றாலும், அந்த சந்ததியை நன்முறையில் வளர்ப்பதும் ஒரு உயிரின் கடமையாகிறது. அந்த கடமையை சரிவர செய்யவே திருமணம் தேவைப்படுகறது.
சமூகம்

இந்த இரண்டும் தான் மூலம் என்றாலும் திருமணம் நடைபெற பெரிய காரணியாக சமூகம் மட்டுமே இருக்கின்றது. ஊர் பிரட்சனைகளை தீர்க்க கூட திருமணமானவனுக்கு தகுதி இருப்பதாக நினைக்கும் மக்களும், திருமணம் நடக்காதவர்களை ஏளனமாக பார்க்கும் சமூகமும் காரணம்.

இந்த திருமணத்தை பற்றி இப்போது பேச சமூகத்தின் முக்கிய பார்வைதான் காரணம். விதிகளை வகுத்துகொண்டே போகும் சமூகம் குழந்தை பிறப்பதற்கு மட்டும் தேவையான செயலே புணர்ச்சியில் போதுமானது என்று நினைத்துக்கொண்டது. அதனால் ஓரினச்சேர்கை, வாய்வழிப் புணர்ச்சி என எல்லாவற்றையும் தடை செய்திருக்கிறது.

பரவலாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயலை மட்டுமே சட்டம் அங்கிகரிக்கின்றது. கொலை, திருட்டு போல புணர்ச்சையையும் ஒரு குற்றமாகவே பார்க்கும் மக்களுக்கு, ஓரினச்சேர்கை, வாய்வழிப் புணர்ச்சி என்பதெல்லாம் சற்று அலர்ஜியாகவே இருக்கும்.

இந்த ஓரினச்சேர்க்கைக்கு இப்போது பல தரப்பிலிருந்தும் ஆதரவு வந்து கொண்டிருக்க வாய் வழிப் புணர்ச்சி மட்டும் மக்கள் வாயைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. ஆண் ஆண் புணர்விலும், ஆண் பெண் புணர்விலும் இந்த வாய் வழிப் புணர்ச்சி முக்கியத்துவம் வகிக்கின்றது. பாலியல் சட்டதிட்டங்கள் மாறும் பட்சத்தில் இதுவும் முக்கியத்துவம் பெரும் என்று தொன்றுவதாலும், நித்தியானந்தர் – ரஞ்சிதா உல்லாசக் காட்சிகளை பணம் கட்டி பார்க்கும் எண்ணற்ற நண்பர்களுக்கும் சந்தேகம் வராமல் தடுக்கவும் இந்த இடுகை.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று பரிணாமக் கொள்கையை எதிர்த்துவரும் கிறித்துவ நாடான அமெரிக்காவிலேயே ஓரினச்சேர்க்கை அங்கிகரிக்கப்பட்டு பல வருடங்களாகிறது. ஓரினச்சேர்க்கையில் முக்கியமான வாய் வழிப் புணர்தலும் விரைவில் அங்கிகரிக்கப்படலாம். ஆனால் இந்த புணர்ச்சியிலும் எய்ட்ஸ் பரவ வழி்யுண்டு என்பதால் ரஞ்சிதா போல ஆண்குறி சப்புவோர்கள் கவணமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

பாலியல் வேட்கை கொள்ளும் போது ஆண் உயிர் பெண் உயிரை புணர்வதும், பெண் உயிர் ஆண் உயிரை புணர அழைப்பதும் இயற்கை. இந்த இயற்கை விதிகளுக்கு சில முறைகள் வைத்து பாலியல் தேவை நிறைவு செய்வது மனித இனம் மட்டுமே. இந்த முறைகளை தகர்த்தெரிய ஓஷோ முதல் சற்குரு வரை முயன்றிருக்கின்றார்கள். அந்த வகை முயற்சியில் இதுவும் ஒன்று.